Home இலங்கை பொருளாதாரம் உலக சந்தையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

உலக சந்தையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

0

உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கரட் தங்கத்தின் விலை 2512.18 டொலர்களாக உயர்ந்துள்ளது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 5.22% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை

அத்தோடு, இலங்கையிலும் தங்கத்தின் விலை சற்று உயர்ந்தே காணப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 211,950 ரூபாவாகவும் மற்றும் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலையானது 194,350 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

மேலும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 185,500 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version