குட் பேட் அக்லி
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சென்ற வாரம் வெளிவந்து வசூலில் வேட்டையாடி வருகிறது. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும் பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.
மிரட்டலான இசையில் படம் செம மாஸாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மேலும் வில்லனாக அர்ஜுன் தாஸ் அஜித்துக்கு நிகரான நடிப்பை வெளிப்டுத்தி இருந்தார்.
என்னை பற்றிய உண்மை இதுதான்.. சர்ச்சைக்கு நடிகர் ஸ்ரீ வெளியிட்ட வீடியோ
விட்டெஜ் பாடல்கள், மாஸ் காட்சிகள், அஜித் படங்களின் மாஸ் ரெஃபரென்ஸ் என படம் தீயாக இருந்தது. ரசிகர்களால் தல மேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் குட் பேட் அக்லி இதுவரை உலகளவில் 8 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், இப்படம் உலகளவில் 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரூ. 208 கோடி வசூல் செய்து தனது வசூல் வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகிறது குட் பேட் அக்லி.
