Home சினிமா சென்னையில் 3 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னையில் 3 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் தெரியுமா?

0

குட் பேட் அக்லி

அடிடா மேளத்த, போட்றா வெடிய என கடந்த 2 நாட்களாக அஜித் ரசிகர்கள் செம குஷியாக உள்ளனர்.

காரணம் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகிவிட்டது. தரமான ஒரு ரசிகராக அஜித்தை வைத்து குட் பேட் அக்லி மூலம் மாஸ் காட்டிவிட்டார்.

கடந்த ஏப்ரல் 10ம் தேதி இப்படம் வெளியாக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

அதேசமயம் வசூல் வேட்டையும் தாறுமாறாக நடந்து வருகிறது.

மாநகரம் ஹீரோ ஸ்ரீ நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க

பாக்ஸ் ஆபிஸ்

இந்த படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 30.9 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
2ம் நாளில் படம் தமிழகத்தில் ரூ. 13.50 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்த நிலையில் 3ம் நாளில் குட் பேட் அக்லி சென்னையில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இப்படம் சென்னையில் 3 நாள் முடிவில் ரூ. 7 கோடி வரை வசூலித்துள்ளதாம். 

NO COMMENTS

Exit mobile version