Home சினிமா குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் எப்போது.. உறுதி செய்த முக்கிய பிரபலம்

குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் எப்போது.. உறுதி செய்த முக்கிய பிரபலம்

0

குட் பேட் அக்லி

நடிகர் அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறார்கள்.

இப்படத்தில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், நட்டி நட்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் பிக் பாஸில் வெளியேறிய சத்யா, தர்ஷிகா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

குட் பேட் அக்லி படத்திற்காக நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார். நேற்று அஜித்தின் கடைசி நாள் ஷூட்டிங் என்பதனால், புகைப்படம் மற்றும் வீடியோவை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டு இருந்தார்.

ரிலீஸ் 

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் குறித்துப் படத்தின் விநோயோகஸ்தர் ராகுல் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு விருந்தாக வெளிவரும் என கூறியுள்ளார்.

இதன்மூலம் இப்படத்தின் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version