Home சினிமா குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸில் மாற்றமா.. உறுதிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்! வைரலாகும் அஜித்தின் புகைப்படம்

குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸில் மாற்றமா.. உறுதிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்! வைரலாகும் அஜித்தின் புகைப்படம்

0

குட் பேட் அக்லி

 தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் வலம் வரும் அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது
63 – வது படமான ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், சமீபத்தில், இந்த படத்தில் நடிகர் பிரசன்னா நடிக்கின்றார் என அவரே கூறியுள்ள நிலையில் படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், அடுத்து தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

வைரல் புகைப்படம் 

இந்நிலையில், அஜித் குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகா உள்ளது என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இதோ அந்த புகைப்படம்..

Source: https://cineulagam.com/article/good-bad-ugly-release-date-1728533491

NO COMMENTS

Exit mobile version