Home இலங்கை சமூகம் தமிழர் பிரேதச பாடசாலை ஒன்றில் அதிபரை நியமிக்க கோரி மக்கள் போராட்டம்

தமிழர் பிரேதச பாடசாலை ஒன்றில் அதிபரை நியமிக்க கோரி மக்கள் போராட்டம்

0

முல்லைத்தீவு (Mullaitivu)  – முள்ளிவாய்க்கால் (Mullivaikkal)  கிழக்கு அ.த.க பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு பாடசாலை அதிபர் ஒருவரை நியமிக்குமாறு பாடசாலை வாயில் முன்பாக பெற்றோர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டமானது இன்றைய தினம் (19) காலை 07 மணியளவில் கிழக்கு அ.த.க பாடசாலை முன்பாக ஆரம்பமானது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்திற்கு கடந்த 8 மாதங்களாக அதிபர் இல்லாமலே இயங்கி வருகின்றது.

பாடசாலை அபிவிருத்தி

இப்பாடசாலையில் 57 மாணவர்கள் கற்பதோடு, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களுக்கு கல்வி சரியாக கிடைப்பதில்லை எனவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வலயக்கல்வி பணிப்பாளர் இ.தமிழ்மாறன் காவல்துறையினர் மற்றும், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர்களுக்கிடையில் பாடசாலை வளாகத்திற்குள் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

நிலையாக அதிபரை நியமிக்குமாறும், அதனை எழுத்து வடிவில் ஆவணமாக தரும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பெற்றோர்கள் கூறினர்.

இதனையடுத்து வலயக்கல்வி பணிப்பாளர், கிழக்கு முள்ளிவாய்க்கால் பாடசாலைக்கு அதிபர்கள் வர விருப்பம் இன்மை காரணமாக எழுத்து மூலமான உறுதிமொழி தரமுடியாது எனவும், அதிபர் ஒருவரை நியமிக்க முயற்சி எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

NO COMMENTS

Exit mobile version