Home இலங்கை சமூகம் மட்டு சீயோன் தேவாலய பெரிய வெள்ளி வழிபாடுகள்…! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

மட்டு சீயோன் தேவாலய பெரிய வெள்ளி வழிபாடுகள்…! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

0

கிறிஸ்தவ மக்களின் சிறப்பு நாளான பெரிய வெள்ளி நிகழ்வு இன்று (18) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

பெரிய வெள்ளி
முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை சிலுவைப் பாதை பாடுகளின் வழிபாடுகள் பலத்த
பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் உள்ள சீயோன் தேவாலய பிரதான
போதகர் ரோஷான் மகேசன் தலைமையில் தலைமையில் பெரிய வெள்ளி சிலுவை பாதை
வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

பெரிய வெள்ளி வழிபாடு

இயேசுபிரான் சிலுவையில் அடையப்பட்ட பாடுகளின் காட்சிகளும் இன்றைய பெரிய வெள்ளி
வழிபாடுகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பெரிய வெள்ளியின் மகத்துவம் பற்றி ஆலய பிரதம போதர்ல் இங்கு விசேட இந்த
சிறப்பு உரைகளும் இடம்பெற்றது.

வழிபாடுகளில் அதிக அளவிலான கிறிஸ்தவ
பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version