நாட்டிலுள்ள குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செயற்படுத்த தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் (Department of Samurdhi Development) தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் குறித்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2025 – 2027 ஆண்டுக்குள் செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியிலான வேலைத்திட்டம்
இதற்காக, குறைந்த வருமானம் பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் துணை நிறுவனங்களின் அரச அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் நாடளாவிய ரீதியிலான வேலைதிட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்துவதற்கான திட்டம் பல துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஆரம்ப கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலிருந்தும் 50 குடும்பங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.