Home இலங்கை கல்வி குறைந்த வருமானம் பெறும் குடும்ப மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

குறைந்த வருமானம் பெறும் குடும்ப மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

0

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைபரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் ஆரம்பமாகியது.

குறித்த நிகழ்வானது கண்டி மாவட்ட செயலகத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.

மஹையாவ பூர்னவத்த மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2025 மே 31 திகதி ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது, அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவது பொருத்தமானது என்பது கண்டறியப்பட்டது.

மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்

அதன் ஒரு கட்டமாக, பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 

அதன் முதல் கட்டமாக, 28 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி, நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க, மத்திய மாகாண பிரதம செயலாளர் எம்.ஏ. பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பரீட்சைகளின் கால அட்டவணை

இதேவேளை 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2025 (2026) கல்வி பொது தராதர (சாதாரண தரப்) பரீட்சை 2026-02-17 முதல் 2026-02-26 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர (உயர்தரப்) பரீட்சை 2026-08-10 முதல் 2026-09-05 வரை நடைபெற உள்ளது.

அதேநேரம் 2026 ஆம் ஆண்டுக்கான, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026-08-09 திகதியன்று இடம்பெறவுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026-12-08 முதல் 2026-12-17 வரை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version