Home இலங்கை சவூதி அரேபியாவில் வேலை தேடுபவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நற்செய்தி

சவூதி அரேபியாவில் வேலை தேடுபவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நற்செய்தி

0

சவுதி அரேபியாவில் தொழில்துறை திறன்களை அடிப்படையாகக் கொண்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கான திறன் பரீட்சையை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதுவரை மொழித் தடைகள் காரணமாக குறித்த பரீட்சைக்குத் தோற்றுவதில் சிரமங்களை எதிர்கொண்ட இலங்கை வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பாளர்களுக்கு இந்தத் தீர்மானம் பெரும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 

இதன் மூலம் சவுதி அரேபியாவில் தொழில்துறை திறன்களை அடிப்படையாகக் கொண்ட வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள், தமது தாய்மொழியிலேயே பரீட்சைக்குத் தோற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, தகுதியான இலங்கை தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் திறன் அடிப்படையிலான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://ibctamil.com/article/good-news-for-saudi-job-seekers-in-sri-lanka-1788590722

NO COMMENTS

Exit mobile version