Home இலங்கை மாட்டை காப்பாற்ற முயன்றபோது குளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம்! – இளைஞன் உயிரிழப்பு

மாட்டை காப்பாற்ற முயன்றபோது குளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம்! – இளைஞன் உயிரிழப்பு

0
image

திவுல்வெவ – வெலிகொல்லேவ வீதியில் ரம்பவெல குளக்கரையில் பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளக்கரையில் கட்டப்பட்டிருந்த மாடு ஒன்றைக் காப்பாற்ற முயன்றபோது உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி உட்பட மூவர் காயமடைந்த நிலையில் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வெலிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுல்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/plowing-machine-overturned-in-the-pond-while-trying-to-save-the-bull—young-man-dies-1788588335

NO COMMENTS

Exit mobile version