Home இலங்கை அரசியல் வெளிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

வெளிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

0

கடந்த கால அரசாங்கத்தை காட்டிலும் புதிய அரசாங்கத்தினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாற்றம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(03.12.2024) அமர்வின் போதெ அவர் இதனை கூறியுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை கடந்த காலங்களில் பெரும் சவால்களுக்குட்பட்ட துறையாக காணப்பட்டதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், தற்போதைய புதிய அரசாங்கத்தின் ஊடாக கடந்த காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் ஏற்பட்ட முறைகேடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் மக்களின் நன்மை சார்ந்து மாத்திரம் வேலைதிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக
பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டுள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 

https://www.youtube.com/embed/krop3TWZvJk

NO COMMENTS

Exit mobile version