Home உலகம் கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு : தவிக்க போகும் ஊழியர்கள்!

கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு : தவிக்க போகும் ஊழியர்கள்!

0

கூகுள் (Google) நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பணியாற்றி வரும் ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை (Sundar Pichai ) அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை கொண்டு கூகுள் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகின்றார்.

இந்நிலையில், கொரேனா நோய்த் தொற்றுக்கு பின்னரான காலப்பகுதியில் கூகுள் நிறுவனத்தில் இருந்து ஊழியர் பணிநீக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பணி நீக்கம் 

கடந்த ஆண்டு சுமார் 12,000 பேர் ஊழியர்களை பணியிலிருந்து கூகுள் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது கூகுளில் நிர்வாக ரீதியாக பல துறைகளில் இயக்குனர் மற்றும் துணைத் தலைவர் பொறுப்புகளில் உள்ள ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தங்கள் நிறுவன செயல்பாட்டை செம்மைப்படுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும், தொழிநுட்ப துறையில் நிலவி வரும் சவால்களை சமாளிக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14

Source: https://ibctamil.com/article/google-layoffs-10-percent-of-employees-lose-jobs-1734757155

NO COMMENTS

Exit mobile version