Home உலகம் காத்திருந்து பலி தீர்த்த ரஷ்யா: உக்ரைனில் விழுந்து சிதறிய அதிபயங்கர ஏவுகணைகள்

காத்திருந்து பலி தீர்த்த ரஷ்யா: உக்ரைனில் விழுந்து சிதறிய அதிபயங்கர ஏவுகணைகள்

0

ரஷ்ய ஜெனரல் படுகொலையை தொடர்ந்து, உக்ரைன் மீது பயங்கர ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனின் கிய்வ் தலைநகரின் பொதுமக்கள் வசிக்கும் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பலத்த வெடிச் சத்தங்கள் 

இதன்போது, நகர மையத்தில் வசிப்பவர்கள் பல கட்டிடங்களில் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளதாகவும், தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும் கிய்வ் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த தாக்குதல்களினால் அறுவர் உயிரிழந்துள்ளதாகவும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தூதரகங்களுக்கு சேதம்

மேலும், ஒரு வரலாற்று தேவாலயம், ஆறு தூதரகங்கள் மற்றும் கியேவ் முழுவதும் உள்ள மற்ற கட்டிடங்களும் இந்த தாக்குதல்களினால் சேதமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது.

இதன்படி, தாக்குதல்களின் விளைவாக ஒரே கட்டிடத்தில் அமைந்திருந்த அல்பேனியா, அர்ஜென்டினா, பாலஸ்தீனம், வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் தூதரகங்களே சேதமடைந்துள்ளதாக உக்ரைனிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, தலைநகரைத் தாக்க ரஷ்யப் படைகள் பயன்படுத்திய ஐந்து இஸ்கந்தர்-எம்/கேஎன்-23 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version