Home இலங்கை சமூகம் 7 பேர் பலியான கோர விபத்து : இராணுவத்தினர் மீது கடும் குற்றச்சாட்டுகள்

7 பேர் பலியான கோர விபத்து : இராணுவத்தினர் மீது கடும் குற்றச்சாட்டுகள்

0

தியத்தலாவை மோட்டார் பந்தயத் திடலில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கண்டி சட்ட வைத்திய அதிகாரி, இராணுவத்தினர் மீது கடும் குற்றச்சாட்டுககளை முன்வைத்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் தற்போதைக்கு பந்தயக் கார் சாரதிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் பந்தயக் கார் சாரதிகள் அன்றி, பந்தயத்தை ஏற்பாடு செய்தவர்களே விபத்துக்கான குற்றவாளிகள் என்று கண்டி சட்ட வைத்திய அதிகாரி சட்டத்தரணி பாலித பண்டார சுபசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இந்தக் கருத்தை வௌியிட்டுள்ளார்.

விமர்சனத்துக்கு உரிய செயல்

பந்தயத் திடலில் ஏராளமான புழுதி படிந்திருந்த நிலையில் வளைவுகள் மட்டுமன்றி பந்தயப் பாதையே கூட தெளிவாக சாரதிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அதன் காரணமாக நிகழ்ந்த விபத்துக்கு சாரதிகளை கைது செய்திருப்பது விமர்சனத்துக்கு உரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பந்தயத்திடல் ஒழுங்கமைப்பு மட்டுமன்றி பந்தயத்தைப் பார்வையிட வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பு குறித்து கூட ஏற்பாட்டாளர்களான ராணுவத்தினர் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காடடியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள்

NO COMMENTS

Exit mobile version