Home முக்கியச் செய்திகள் புலம்பெயர் பெருவர்த்தகருக்கு ‘சங்கு’ ஊதிய வித்தியர்!!

புலம்பெயர் பெருவர்த்தகருக்கு ‘சங்கு’ ஊதிய வித்தியர்!!

0

 தமிழ் ஊடகப்பரப்பின் வித்தகரான அந்த சிரேஷ்ட ஊடகவியலாளரை லண்டனில் இருந்து சென்ற புலம்பெயர் பெருவர்த்தகர் வேலைக்கமர்த்தியபோதே, ‘அது சரிப்பட்டுவராது..’ என்று தமக்குள் பேசிக்கொண்டது ஊடக வட்டாரங்கள்.

வயசு போனாலும் மனுசர் கொஞ்சம் ரோசக்காரர்.

புலம்பெயர் பெருவர்த்தகரைவிட்டு வித்தியர் தற்பொழுது வெளியேறிவிட்டதாகச் செய்தி.

யாழில் சங்குச் சின்னத்தில் போட்டிபோடும் ஒரு பெண் வேட்பாளருக்கும், குருவின் சாமிக்கும் மாத்திரம் ஆதரவளித்து எழுதும்படி வற்புறுத்தியிருக்கின்றார்கள்.

‘முடியாது’ என்று கூறி வெளியேறிவிட்டாராம் வித்தியர்.

குருவின் அந்தச் சாமி ‘காசு’ என்றால் வாலை ஆட்டியபடி எங்குவேண்டுமானாலும் ஓடித்தரியக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் அந்தப் பெருவர்த்தகரின் பினாமியாக மாறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

ஆனால் ஒரு மாமனிதரின் மனைவியுமா??.. ‘நம்பமுடியவில்லை’ என்று மூக்கில் விரலை வைக்கின்றார்கள் யாழ் ஊடகவியலாளர்கள்.

NO COMMENTS

Exit mobile version