நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து அரசியல் மட்டத்தில் தற்காலிக ஓய்வினை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்சர்கள் (Rajapaksas) திடீர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சந்திப்பு விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (14.04.2025) இடம்பெற்றதாக மகிந்தவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதியும் சகோதரருமான மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக சென்றுள்ளார்.
முகநூல் பதிவு
இந்த சந்திப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முகநூல் பக்கத்தில், “எனது சகோதரர், முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ச ஆகியோர் எனது உத்தியோகபூர்வ இல்லத்தில் என்னைச் சந்திக்க வந்தனர், நாங்கள் மிகவும் அன்பான உரையாடலை மேற்கொண்டோம்.
புத்தாண்டு தினத்தன்று அவர்கள் கைகளில் வெற்றிலையுடன் வருவதைப் பார்த்தபோது, பக்மாவில் உறவினர்களை பார்க்க செல்லும் சம்பிரதாயமே எனக்கு நினைவுக்கு வந்தது.
புத்தாண்டு வாழ்த்து
அவர்கள் இருவருக்கும் வளமான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்வில் பல நண்பர்களும் கலந்து கொண்டனர், அவர்களுக்கு வளமான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை தனது குடும்பம் மற்றும் பேரக்குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்களையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://www.youtube.com/embed/wZR31KGfQXA
