Home இலங்கை அரசியல் கருதினாலின் நிகழ்ச்சி நிரலுக்கே அநுர ஆட்சி : தென்னிலங்கை தரப்பு கண்டனம்

கருதினாலின் நிகழ்ச்சி நிரலுக்கே அநுர ஆட்சி : தென்னிலங்கை தரப்பு கண்டனம்

0

இந்த அரசாகம் தமிழ் புலம்பெயர்ந்தோர் மற்றும் கருதினாலின் நிகழ்ச்சி நிரலுக்கே ஆட்சி நடத்துகிறது என புதிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

புதிய மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், “ மதங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது.மேலும் இந்த அரசாகம் தமிழ் புலம்பெயர்ந்தோர் மற்றும் கருதினாலின் நிகழ்ச்சி நிரலுக்கே ஆட்சி நடத்துகிறது.

பொது மக்கள் பாதுகாப்பு

கருதினாலின் வேண்டுகோளின் பேரிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் போன்ற நியமனங்கள் வழங்கப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறிய கருத்து ஏனைய பௌத்தம்,இந்து,முஸ்லிம் மக்களுக்குத் தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடும்.

அத்தோடு மதங்களுக்கிடையில் பிளவுகளை உருவாக்க ஏற்படுத்திய ஆரம்பப் புள்ளியாகக் கருதவேண்டியுள்ளது.

குறித்த நியமனங்களில் கருதினாலின் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தால் அது சட்டத்திற்கு முரணானது.அதை நாம் வன்மையாகக் கண்டிருக்கிறோம்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) இதைவிடப் பொறுப்பாகக் கடமையாற்ற வேண்டும். அவர் 3வீத மக்களின் பிரதிநிதியோ அல்லது தொழிற்சங்க தலைவரோ போராட்டக்காரரோ அல்ல.

இந்த நாட்டின் சபாநாயகரும் நான்கு அமைச்சுக்களின் அமைச்சர் அவரின் செயற்பாடுகளில் மாற்றம் தேவை.
இதுவரை அவருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.”என தெரிவித்தார். 

NO COMMENTS

Exit mobile version