Home இலங்கை சமூகம் நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு – அரசு எடுத்துள்ள நடவடிக்கை

நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு – அரசு எடுத்துள்ள நடவடிக்கை

0

அரசாங்கம் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ள 70,000 மெற்றிக் தொன் அரிசியில் 10,400 மெற்றிக் தொன்களை இறக்குமதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக லங்கா சதொச (Lanka Sathosa) தலைவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் லங்கா சதொச மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனம் 5,200 மெற்றிக் தொன்களை இறக்குமதி செய்யவுள்ளதாக லங்கா சதொச தலைவர் வைத்தியர் சமித்த பெரேரா (Chamitha Perera) இன்று (6) குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரிசி விரைவில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாகவும், அது கிடைத்தவுடன் விநியோகிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரிசி இறக்குமதியாளர்களின் அரிசி மாதிரிகள்

அரிசி இருப்பு கொண்டு வரப்பட்ட பின்னர், லங்கா சதொச மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனம் 40,400 மெற்றிக் தொன் 20,200 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய விலைமனு கோரியுள்ளதாகவும், இங்கு ஸ்வர்ண நாடு அரிசி மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அரிசி இறக்குமதி தனியாருக்கு திறக்கப்பட்டுள்ளதால், தனியார் துறையால் இறக்குமதி செய்யப்படும் அரிசி அடுத்த சில நாட்களில் இலங்கையை வந்தடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி இறக்குமதியாளர்களின் அரிசி மாதிரிகள் பல அரச நிறுவனங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

நாட்டு அரிசி மற்றும் தேங்காய் 

இதேவேளை, நாடளாவிய ரீதியாக உள்ள ஸ்ரீலங்கா சதொச ஊடாக இன்று (6) முதல் வாடிக்கையாளர்களுக்கு நாட்டு அரிசி மற்றும் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் சமித பெரேரா தெரிவித்தார்.

இதன்படி வாடிக்கையாளர் ஒருவர் ஒருமுறைக்கு தலா ஒரு கிலோ அரிசி 220 ரூபாவிற்கும், ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஒருவர் ஐந்து கிலோ அரிசியும் மூன்று தேங்காய்களையும் ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version