Home இலங்கை அரசியல் வடக்கில் விமான நிலையம் என்ற பெயரில் அரசின் தான்தோன்றித்தனம் : சபையில் கொந்தளித்த எம்.பி

வடக்கில் விமான நிலையம் என்ற பெயரில் அரசின் தான்தோன்றித்தனம் : சபையில் கொந்தளித்த எம்.பி

0

தற்போதைய அரசாங்கத்திற்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றால் வேறு இடங்களை கவனிக்கலாம் எதற்காக யாழ்ப்பாண நிலங்களை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய அரசாங்கம் தான்தோன்றித்தனமாக எதேட்சையதிகாரமாக முடிவுகளை எடுக்க கூடாது.

விமான நிலையம் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்ற மனநிலையில் விமான நிலையத்திலிருந்து தொடரும் பகுதி நிலங்கள் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு தேவை இருந்தால் பயன்பாடற்ற காணிகளை பயன்படுத்தலாமே எதற்காக மக்கள் குடியேறும் நிலங்கள் அளிக்கப்பட வேண்டும்.

இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயம், ஆனால் குறித்த விடயம் தொடர்பில் எந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று கருத்து தெரிவிக்கவில்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.youtube.com/embed/n_dsoORUvio

NO COMMENTS

Exit mobile version