Home இலங்கை சமூகம் நடைமுறைக்கு வரும் புதிய முறைமை.. மேல் மாகாண சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

நடைமுறைக்கு வரும் புதிய முறைமை.. மேல் மாகாண சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

0

மேல் மாகாணம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (28) முதல் GovPay ஆன்லைன் வசதியின் ஊடாகவே மோட்டார் போக்குவரத்து அபராதங்களை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அபராதங்களை வசூலிக்கும் புதிய முறைமையை அரசாங்கம் நடைமுறைபடுத்தியுள்ளது.

புதிய முறைமை

இந்த விடயத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க ஊடகவியலாளர்  தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு ஏற்கனவே தேவையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்றையதினம் மட்டும் 1,000 மோட்டார் போக்குவரத்து பொலிஸாருக்கு ஸ்மார்ட் கைப்பேசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டிஜிட்டல்துறை அமைச்சின் தீவிர ஒத்துழைப்பின் காரணமாக, இந்த திட்டம் மிக விரைவாக ஆரம்பிக்க முடிந்ததாக அமைச்சர் பிமல் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version