Home இலங்கை அரசியல் வர்த்தகர்களுக்கு வரிச் சலுகை வழங்கும் அரசாங்கம்! சஜித் குற்றச்சாட்டு

வர்த்தகர்களுக்கு வரிச் சலுகை வழங்கும் அரசாங்கம்! சஜித் குற்றச்சாட்டு

0

அரசாங்கம் முன்னணி வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபா வரிச் சலுகை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa)  தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வரிக்கொள்கை தொடர்பில் நேற்றைய தினம்(18.06.2024) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வரி அறவீடு

இது தெடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த அடிப்படையில் அரசாங்கம் இவ்வாறு வரிச் சலுகை வழங்கியது. வர்த்தகர்களுக்கு வரிச் சலுகை வழங்கியிருக்காவிட்டால் பொதுமக்களிடம் புதிதாக வரி அறவீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.

பொதுமக்கள் மீது வரி விதித்து அரசாங்கம் 60000 கோடி ரூபா வருமானம் ஈட்ட உத்தேசித்துள்ளது.

இதேவேளை, 120,000 கோடி ரூபா வரி செலுத்தப்படவில்லை .உரிய முறையில் வரி அறவீடு செய்யப்பட்டிருந்தால் தற்பொழுது பாரியளவில் வரி அறவீடு செய்ய வேண்டியதில்லை.

ஒரு கோடி ரூபாவிற்கு மேல் வரிச் செலுத்தாதோரின் எண்ணிக்கை 4200 எனவும் மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஐந்து பேர் மட்டும் 700 கோடி ரூபா வரிச் செலுத்த வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.

இதேவேளை, வரிச் செலுத்தத் தவறும் நபர்கள் குறித்த அறிக்கையொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version