Home இலங்கை அரசியல் வன்னியிலும் ஊழலற்ற மக்களுக்கான ஆட்சி அவசியம்: எமில்காந்தன் எடுத்துரைப்பு

வன்னியிலும் ஊழலற்ற மக்களுக்கான ஆட்சி அவசியம்: எமில்காந்தன் எடுத்துரைப்பு

0

தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பாேன்று வன்னியிலும் ஊழலற்ற மக்களுக்கான
ஆட்சியை முன்னெடுக்க புதியவர்களுக்கு சந்தர்ப்பம் காெடுக்க வேண்டும் என வன்னி
மாவட்ட சுயேட்சை குழு 7 இன் முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (13.10.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பாேதே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆட்சி மாற்றம்

தென்னிலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தாெடர்ந்து ஊழலற்றவர்கள்,
புதியவர்கள், இளைஞர்கள், மண்ணை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்
என்ற எண்ணம் வன்னி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அத்தகைய மாற்றத்திற்கு ஒரு குழுவாக உங்களில் ஒருவராக நாம்
பாேட்டியிடுகின்றாேம். அதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும்.

அவ்வாறு
வழங்குவதன் மூலம் மக்களின் மனங்களைலும், வீடுகளிலும், கிராமங்களிலும்
மாற்றத்தை காணமுடியும்.

வன்னி மக்களின் அரசியல், அபிலாசைகளுடன் இணைந்த அபிவிருத்தியை தொடர்ந்து
முன்னெடுத்துச் செல்ல எம்முடன் மக்கள கைகாேர்க்க வேண்டும்.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version