தமிழ்த் தேசிய உணர்வைக் கொண்டவர்கள் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு, இலங்கை தமிழரசுக் கட்சியுடன் (ITAK) இணைய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (14.05.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் வடக்கு கிழக்கில் தென்னிலங்கை சார்ந்த கட்சிகள் ஆட்சி அமைப்பது என்பது சிரமமான விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போதைய சில சூழ்நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் முடிவுற்ற நிலையில்
சபைகளை அமைக்கின்ற செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்ற பிரதிநிதித்துவ முறை என்பது ஒரு சிக்கலான பிரதிநிதித்துவ முறையாகும். இதன் ஊடாக வட்டாரத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், பட்டியல் மூலமாக வெற்றி பெற்ற உறுப்பினர்கள், தொங்கு நிலை ஆசனங்கள் பெற்றவர்கள் என மூன்று வகையான உறுப்பினர்கள் பல சபைகளில் இடம்பெற்றிருக்கின்றார்கள்.
இந்தநிலையில் ஆளுங்கட்சியாக இருந்தால் என்ன அல்லது எதிர்கட்சிகளாக இருந்தால் என்ன எல்லா கட்சிகளுக்கும் சபைகளை அமைக்கின்ற விடயத்தில் சிரமங்கள், சிக்கல்கள், காணப்படுகின்றன.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தில் தமிழரசிக் கட்சியை பொறுத்த அளவில் கணிசமான ஆசனங்களை
தமிழரசுக் கட்சி கைப்பற்றி இருக்கின்றது.
இந்த நிலையிலும் மூன்று வகையான நிலமை காணப்படுகின்றது. முதலாவது தனித்து நின்று ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.
ஓரிரு ஆசனங்களை மேலும் பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய நிலைமை காணப்படுகிறது. இன்னும் சில சபைகளை அமைப்பதில் சவாலாகவும் காணப்படுகின்றன. எமது கட்சியில் பலர் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருந்தார்கள் அவ்வாறு விண்ணப்பித்திருந்தும் பலருக்கு போட்டியிட முடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கலாம்.
அவ்வாறானவர்கள் உங்களுடைய பலத்தை காட்டுவதற்காக பலர் போட்டியிட்டு தமிழ் தேசிய உணர்வோடு
வெற்றி பெற்றிருக்கலாம். அவர்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்வது யாதெனில் கடந்த காலத்தில் வேட்பாளர் தெரிவில் சில தவறுகளிடம் பெற்றிருக்கலாம்.
எனவே நீங்கள் தமிழ் தேசிய உணர்வு உள்ளவர்கள் சற்று விலகி இருந்தாலும் உங்களுடைய தாய் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதை நான் கேட்டுக் கொள்கின்றேன்”என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க…
https://www.youtube.com/embed/-vb0CE39Ccghttps://www.youtube.com/embed/W1ZbEy-yp34
