Courtesy: Sivaa Mayuri
தற்போதைய முறைக்கு பதிலாக டிஜிட்டல் வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் வரை தற்போதைய முறையே தொடரும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (10) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்
மேலும், புதிய டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம், நவீன தொழில்நுட்பத்துடன், நிறுவனங்களுக்கு இடையே தரவு பரிமாற்றத்தை மேம்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏறக்குறைய 15 வருடங்களாக பாவனையில் உள்ள தற்போதைய ஸ்மார்ட் கார்ட் அடிப்படையிலான அனுமதிப்பத்திர முறைக்கு பதிலாக இந்த முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.