Home இலங்கை பொருளாதாரம் இலங்கைக்கு கிடைக்கவுள்ள மில்லியன் டொலர் வருமானம்

இலங்கைக்கு கிடைக்கவுள்ள மில்லியன் டொலர் வருமானம்

0

இலங்கை அரசாங்கம் சுற்றுலாத்துறை மூலம் குறுகிய காலத்தில் 8,500 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வலயங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்களுடன் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”க்ளீன் சிறிலங்கா (Clean Sri lanka) என்ற பெயரில் இலங்கையை மாற்றியமைக்கும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சுற்றுலாப் பயணிகளின் வருகை

அதற்காக ஜனாதிபதி செயலணியொன்றும் பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் பணிகள் தற்போது ஆரம்பக்கட்டத்தில் உள்ளன.

குறுகிய காலத்தில் 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைத்து, அதனூடாக 8,500 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

எனவே, 2025 ஆம் ஆண்டு வணிக ரீதியில் சுற்றுலாத்துறைக்கு ஒரு முக்கிய ஆண்டாகும்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் துரிதப்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், சுற்றுலா வலயங்களின் சுகாதார தேவை தொடர்பில் அரசாங்கம் அதிக அவதானம் செலுத்தியுள்ளதுடன், அதற்குத் தனியார் துறையின் பங்களிப்பையும் எதிர்பார்த்துள்ளது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


YOU MAY LIKE THIS


https://www.youtube.com/embed/B6XjA2GpDpw

NO COMMENTS

Exit mobile version