அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாக கோட்டே சிறி கல்யாணி சமாக்ரி தர்ம மஹா சங்க சபையின் அனுநாயக்க பேராசிரியர் கொட்டாபிட்டியே ராஹுல தேரர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரினி அமரசூரிய பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளினால் மக்கள் விரக்தி அடைந்ததாகவும், அந்த விரக்தி காரணமாகவே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆட்சி அதிகாரம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கையின் காரணமாக மக்கள் கட்சிக்கு வாக்களித்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி வழங்கப்பட்டு சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் மக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அவர்களது எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் சரியில்லை என மக்கள் விமர்சனம் செய்யும் வகையில் செயற்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கொள்கலன் விடுவிப்பு, வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் போன்றன நேர்மையான முறையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
விமர்சனங்களை அரசாங்கம் என்ற வகையில் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது எனவும், தாம் செய்யும் அனைத்தும் சரி என்ற நிலைப்பாடு வீழ்ச்சியை நோக்கி நகர்த்தி விடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
