Home இலங்கை பொருளாதாரம் முத்திரை வரியை 100 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் முடிவு

முத்திரை வரியை 100 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் முடிவு

0

சொத்துக்களை குத்தகைக்கு எடுப்பது அல்லது வாடகைக்கு எடுப்பதற்கான
ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரியை 100 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் முடிவு
செய்துள்ளது.

நிதி அமைச்சகத்தின்படி, திருத்தப்பட்ட, இந்த கட்டணங்கள் ஏப்ரல் முதலாம (1) ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

தற்போது, ​​குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தங்களுக்கு, முழு குத்தகை
காலத்திற்கும் செய்யப்படும் எந்தவொரு முன்பணமும் உட்பட, ஒவ்வொரு 1,000 ருபாய்
அல்லது அதன் ஒரு பகுதிக்கும் முத்திரை வரியாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

முத்திரை வரி

இந்த முத்திரை வரி ஏப்ரல் 1 முதல் 20 ரூபாயாக ஆக அதிகரிக்கப்படும் என்று
அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏற்கனவே நிதி அமைச்சர் அநுர குமார
திசாநாயக்கவால் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு முத்திரை வரியில் மேற்கொள்ளப்படும்
முதல் திருத்தம் இதுவாகும்.

இருப்பினும், நுகர்வோர் கடன் சட்டத்தின் கீழ் ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரி,
மொத்த மதிப்பில் 1,000 ருபாய் அல்லது அதன் ஒரு பகுதிக்கு 10 ருபாய் என
வசூலிக்கப்பட்டு வரும் கட்டணம் மாறாமல் இருக்கும் என்று அமைச்சகம்
தெளிவுபடுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version