Home இலங்கை பொருளாதாரம் அரசசார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

அரசசார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

0

இலங்கையில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களை கிராமியப் பொருளாதார அமைச்சின் கீழ் நிர்வகிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவரை காலமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வந்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் ஊடாகவே அரச சார்பற்ற நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வந்தன.

எனினும், அரச சார்பற்ற நிறுவனங்களில் பெரும்பான்மையான நிறுவனங்கள் கிராமியப் பொருளாதார அபிவிருத்தியையே இலக்காகக் கொண்டுள்ளன.

வர்த்தமானி அறிவித்தல்

இதன் காரணமாக அவற்றை கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நிர்வகிப்பதற்கு அரசாங்கம் தற்போதைக்கு உத்தேசித்துள்ளது.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெகுவிரைவில் வெளியிடப்படும் என்றும் தெரியவந்துள்ளது.  

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா

NO COMMENTS

Exit mobile version