நாணய உருவாக்கம் மற்றும் பணப்புழக்கம் தொடர்பில் அரசாங்கத்திற்கு சரியான புரிதல் இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இது பற்றி புரியாமல் வேறு யாரையும் அல்லது ஊடகங்களையும் எப்படி குற்றம் சாட்ட முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பணப்புழக்கம் பற்றிய நல்ல புரிதல்
பத்தரமுல்லை சீலரதனதேரருக்கும் பணப்புழக்கம் பற்றிய நல்ல புரிதல் இருப்பதாகவும், அனுபவமின்மையால் அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்களுக்கும் அது பற்றி தெரியாது என்றும் அவர் கூறுகிறார்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றிக்காக கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்
உதய ஆர் செனவிரத்ன அறிக்கை தொடர்பில் பொய்யான கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஹரிணி அமரசூரிய (harini amarasuriya)பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் பொய்களை கூறினால் பதவி விலகுவது மரபு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவ்வளவு கூச்சலிட்டாலும் அவர்களுக்கு அரசியலமைப்பு பற்றி தெரியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.