Home இலங்கை அரசியல் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! ரணில் ஒதுக்கிய பணம் – மறுக்கும் அநுர தரப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! ரணில் ஒதுக்கிய பணம் – மறுக்கும் அநுர தரப்பு

0

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக இதற்கு முன்னர் இருந்த அரசாங்கத்தினால் நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை என்று பிரதமர் ஹரினி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். 

பாதுக்க பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பணம் ஒதுக்கப்படவில்லை

மேலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்(Ranil Wickremesinghe) உறுதியளித்த போதிலும் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் வினைத்திறன் மிக்க அரச சேவையொன்று உருவாக்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தின் போது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, நீர்கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக்கு தேவையான ஒதுக்கீடுகளை செய்திருந்ததாக மீண்டும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version