Home இலங்கை அரசியல் 20 ஆயிரம் சம்பள அதிகரிப்பு கோரும் அரச ஊழியர்கள் : தேவையான பெருந்தொகை பணம்

20 ஆயிரம் சம்பள அதிகரிப்பு கோரும் அரச ஊழியர்கள் : தேவையான பெருந்தொகை பணம்

0

பதினைந்து இலட்சம் அரச ஊழியர்களுக்காக 20,000 ரூபாய் அதிகரிப்புடன் சம்பளத்தை வழங்குவதற்கு வருடாந்தம் 275 பில்லியன் ரூபா நிதி அவசியம் என்றும், அது தலா தேசிய உற்பத்தியில் 1% என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க(Shehan Semasinghe) தெரிவித்துள்ளார். 

அந்த நிதியை உழைப்பதற்காக தற்போது காணப்படும் வற் வரியை 4% ஆல், அதாவது வரி வீதத்தை 22% ஆக அதிகரிக்க வேண்டும் என்றும், அது தவிர நிறுவன வரி வீதத்தை 42% என்ற மட்டத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிலைபேறான பொருளாதார விருத்தி 

பொருளாதாரத்தை மேலும் அழுத்தத்திற்கு உட்படுத்த வேண்டி ஏற்படும் என்றும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை அதிகரித்தல், ஒவ்வொரு கடன் மறுசீரமைப்பை மீளத்திருப்புவதற்கான நடவடிக்கையாகக் கூடும் என அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் இதனால் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியதுடன் நாடு மீண்டும் 2022 அனுபவித்த சிக்கலான பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளில் பயணிக்கக் கூடும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நிலைபேறான பொருளாதார விருத்திக்காக ஒவ்வொரு பிரஜை மற்றும் நிறுவனத்தின் ஒத்துழைப்பு அவசியமாவதுடன் பொதுமக்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு இன்றி இந்த சவால்களை எதிர்கொண்டு மிகவும் வலுவான பொருளாதாரமொன்றை உருவாக்கக் கூடிய தாக இருக்கும் என்று அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version