Home இலங்கை அரசியல் அரச ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாங்கம்: ஆளும் கட்சி எம்.பி பெருமிதம்

அரச ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாங்கம்: ஆளும் கட்சி எம்.பி பெருமிதம்

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கட்டம்
கட்டமாக நிறைவேற்றி வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கடந்த 39 வருடங்களாக மூடப்பட்டிருந்த சேற்றுக்குடா புதூர் வீதியை திறந்து வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு இன்று(23.04.2025) களவிஜயம் மேற்கொண்ட கந்தசாமி பிரபு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும்
தெரிவிக்கையில்,

“கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த வீதி மூடப்பட்டிருந்தது சம்பந்தமாக எதுவித
நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை.

மகிழ்ச்சியில் மக்கள் 

இருப்பினும் நாம் வழங்கிய வாக்குறுதிக்கு
அமைவாக தற்போது இந்த வீதி மக்களின் பாவனைக்காக திறக்கப்படும் பணிகள் தற்போது
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் அரச ஊழியர்கள் பெரிதும் நன்மை அடைய உள்ளனர். எமது அரசாங்கம் வழங்கிய
வாக்குறுதிகளை நிறைவேற்றியதற்காக இப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version