Home இலங்கை அரசியல் அரசியல் சார்பு கலாசாரத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது: பிமல் ரத்நாயக்க

அரசியல் சார்பு கலாசாரத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது: பிமல் ரத்நாயக்க

0

அரசியல் சார்பு கலாசாரத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதென
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 704 ஊழியர்களுக்கு நிரந்தர நியமன கடிதங்களை
வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இப்போது
நடைபெறும் அனைத்து நியமனங்களும் கட்சி, இனத்திற்குப் பிணைக்கப்படாமல் சமமான
முறையில் வழங்கப்படுகிறது.

அரசியல் சார்பு கலாசாரம்

கடந்த காலத்தில் அரசாங்கங்கள் ஆட்சேர்ப்புகளில் அரசியலை திணித்து
பொதுமக்களின் பணத்தை வீணடித்தன.

செப்டம்பர் 21 ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணை நாட்டை புதிய பாதையில்
நகர்த்தியது.

ஊழல் நிறைந்த காலம் முடிந்து, சமத்துவம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு உறுதியான
அரசாங்கம் உருவாகியுள்ளது.

அரசாங்கம், தொழில் பாதுகாப்பை உறுதி செய்யும், இதன் மூலம் குடிமக்கள் நாட்டின்
நலனுக்கு, கூட்டு முன்னேற்றத்தில் பங்களிக்க வேண்டும்” எனவும் அமைச்சர் பிமல்
ரத்நாயக்க தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version