Home இலங்கை அரசியல் வடக்கு கிழக்கு மக்களை கண்டுகொள்ளாத அரசாங்கம்: வணபிதா ஜீவநந்த பீரிஸ் கவலை

வடக்கு கிழக்கு மக்களை கண்டுகொள்ளாத அரசாங்கம்: வணபிதா ஜீவநந்த பீரிஸ் கவலை

0

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தற்போதைய அரசாங்கமும் செவிமடுக்காமல் இருப்பதாக மக்கள் பேரவைக்கான இயக்கத்தினை சேர்ந்த வணபிதா ஜீவநந்த பீரிஸ்
தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரையும் இன்று(06) நடைபெற்ற நீதிக்கான நடை பயணத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“காலிமுகத்திடல் அரகலய போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து மட்டக்களப்பு
நகரில் நீதிக்கான பயணம் தொடர்ந்து 1030ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றது.

பறிக்கப்பட்ட உரிமைகள்

அந்தவகையில், வடக்கு கிழக்கில் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. காணாமல்
ஆக்கப்பட்டோருக்கான நீதி அவர்களுக்கான இடங்கள் அன்று முதல் இன்றுவரை
கிடைக்கப்படவில்லை.

அனைத்து மக்களையும் விட அதிகமாக வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகள்
பறிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொள்ள வேண்டும்.

எனவே, அந்த மக்களின் நோக்கத்தை கூட தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம்
கூட இன்னும் செவிமடுக்காத நிலையில் இருக்கின்றது.

மக்கள் ஒன்றுபடவேண்டும்

எனவே, அந்த மக்களின்
நோக்கத்துக்காக மக்கள் பேரவைக்கான இயக்கமாகிய நாங்கள் அன்றும் இன்றும்
தொடர்ந்து பேராடிவருகின்றோம்.

அதை வலியுறுத்துவதற்காக இந்த தொடர்ச்சியான
நடைபாதை போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த அசாதாரண நியாயமில்லாத இந்த முறையை மாற்றுவதற்காக உண்மையான மாற்றத்தை
கொண்டு வருவதற்காக மக்களாகிய நாங்கள் ஒன்றுபடவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
 

NO COMMENTS

Exit mobile version