Home இலங்கை அரசியல் IMF திட்டங்களை நிராகரித்துள்ள அநுர அரசாங்கம்

IMF திட்டங்களை நிராகரித்துள்ள அநுர அரசாங்கம்

0

2026 பட்ஜெட் தொடர்பாக IMF முன்வைத்த சில திட்டங்களை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (10)நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சொத்து வரி விதிக்க IMF முன்வைத்த திட்டத்தை அரசாங்கம் நிராகரித்ததாக அமைச்சர் கூறினார்.

சொத்து வரி 2027 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..

சம்பள உயர்வுக்கான முன்மொழிவும் நிராகரிப்பு

“சம்பள உயர்வுக்கான IMF முன்மொழிவையும் நாங்கள் நிராகரித்தோம், இது பணவீக்க விகிதத்தை விடக் குறைவு.

எங்களுக்குக் கிடைத்த ஆணையின்படி, பணவீக்க விகிதத்தை விட சம்பள உயர்வு அதிகமாக இருக்க வேண்டும் என்று IMF-க்கு தெரிவித்தோம்,” என்று அவர் கூறினார். 

NO COMMENTS

Exit mobile version