Home இலங்கை அரசியல் மக்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் திருடர்களை பிடிக்க முடியாது – நீதி அமைச்சர்

மக்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் திருடர்களை பிடிக்க முடியாது – நீதி அமைச்சர்

0

 மக்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் திருடர்களை பிடிக்க முடியாது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

திருடர்களை பிடிப்பது தொடர்பில் மக்கள் எதிர்பார்க்கும் வேகத்திற்கு செல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினர் இந்த விடயத்தை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் மாதம் ஒரு தடவை ஓர் கண்காட்சியை எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு நடைபெறாத காரணத்தினால் அவர்களது நம்பிக்கை இழக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களில் அனைத்தையும் செய்து விட முடியாது எனவும் அரசாங்கத்திற்கு ஐந்து ஆண்டுகள் பதவிக் காலம் உள்ளது எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.  

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version