திருகோணமலை மாவட்டத்தில்,
ஏறத்தாழ 1000 ஏக்கர் அரச காணிகள் இருப்பதாக வெளிநாட்டு
வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அருண்
ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று(27) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
குமாரதுங்கவுக்கும் இந்த மாவட்டத்தில் இரண்டு ஏக்கர் காணி இருக்கின்றது. அந்த
காணிக்குரிய குத்தகை எதுவும் இன்னும் செலுத்தபடாது நிலுவையாக உள்ளது.
பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு
எனவே, இந்த வகையான காணிகளை உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும். அதற்குத் தேவையான
உரிய நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு தொடர்பான
முன்னேற்றம் ஏற்பட வேண்டும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
