Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் சிறுமி ஒருவரை தகாத முறைக்குட்படுத்திய அரச அதிகாரி கைது

முல்லைத்தீவில் சிறுமி ஒருவரை தகாத முறைக்குட்படுத்திய அரச அதிகாரி கைது

0

முல்லைத்தீவில் (Mullaitivu) சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி

இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசுவமடு கிழக்கினை சேர்ந்த 33 வயதுடைய நபர் மீதே பாதிக்கப்பட்ட சிறுமி புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியை பாலியல் ரீதியாக தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குறிப்பிட்ட அரச உத்தியோகத்தரை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening

Source: https://ibctamil.com/article/government-official-arrested-in-mullaitivi-1726747021

NO COMMENTS

Exit mobile version