Home இலங்கை சமூகம் மீண்டும் சேவையை ஆரம்பித்த நெடுந்தாரகை பயணிகள் படகு

மீண்டும் சேவையை ஆரம்பித்த நெடுந்தாரகை பயணிகள் படகு

0

நெடுந்தாரகை பயணிகள் படகு சுமார் ஒரு வருடத்தின் பின்னர் இன்றையதினம் (19) தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் (P. S. M. Charles), வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் (RDA) நெடுந்தாரகை பயணிகள் படகு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

நெடுந்தீவு இறங்குதுறைக்கு சென்ற ஆளுநர் நெடுந்தாரகை பயணிகள் படகை பார்வையிட்டார்.

நெடுந்தாரகை படகு சேவை 

இதுவரை காலமும் மாகாண சபையின் பொறுப்பில் காணப்பட்ட இந்தப் படகானது, 52 மில்லியன் ரூபா செலவில் திருத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமது தீவில் நீண்டகாலமாக காணப்பட்ட போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில், நெடுந்தீவு மக்கள் ஆளுநருக்கு நன்றி தெரிவித்தனர்.

இதேவேளை தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்,

இன்று முதல் பயணிகள் சேவையை ஆரம்பித்துள்ள நெடுந்தாரகை படகு தினமும் நெடுந்தீவில் இருந்து ஒரு தடவை குறிகட்டுவான் இறங்கு துறைக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version