யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில், அண்ணளவாக
இரண்டு ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசால் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
திஸ்ஸ விகாரைக்காக அண்ணளவாக 8 ஏக்கர் வரையான பொதுமக்களின் காணிகள்
அபகரிக்கப்பட்டுள்ளன.
காணிகளை விடுவிக்க நடவடிக்கை
குறித்த காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கடந்த பல
வருடங்களாக மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன்
தொடர்ச்சியாகவே, தற்போது அண்ணளவாக 2 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.
எல்லை அமைக்கும் பணி
8 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.
காணிகள்
விடுவிக்கப்பட்ட பின்னர் எல்லை அமைக்கும் பணிகளுக்காக ஒருதொகுதி நிதியும்
கிடைத்துள்ளது என்று கூறப்படுகின்றது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும்
நம்பப்படுகின்றது.
