Home இலங்கை அரசியல் மகிந்தவை இலக்கு வைத்துள்ள அநுர: உருவெடுக்கும் சர்ச்சை

மகிந்தவை இலக்கு வைத்துள்ள அநுர: உருவெடுக்கும் சர்ச்சை

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) அவரது இல்லத்திலிருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த (Premnath C. Dolawaththa) தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இல்லத்திற்கு வாடகையாக ரூ. 4.6 மில்லியன் செலுத்த வேண்டும் அல்லது அதை விட்டு வெளியேற வேண்டும் என்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கூற்றுக்கு பதிலளிக்கும் போதே தொலவத்த இன்று (20) இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதியை அவரது இல்லத்திலிருந்து வெளியேற்ற மக்கள் அரசாங்கத்திற்கு எந்த ஆணையும் வழங்கவில்லை என்றும் தொலவத்த குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் சதி 

இந்த நிலையில், ஜனாதிபதிகள் முன்னாள் ஜனாதிபதிகளை தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதில்லை என தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மகிந்த ராஜபக்சவை அவரது இல்லத்திலிருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்து வரும் அதே வேளையில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறனதொரு பின்னணயில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களும் அரசாங்கம் மீளப்பெறும் என ஜனாதிபதி அநுர குமார நேற்றையதினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version