Home இலங்கை அரசியல் இரகசிய ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் பெற தயாராகும் அரசாங்கம்

இரகசிய ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் பெற தயாராகும் அரசாங்கம்

0

நாட்டுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரகசியமான ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற அங்கீகாரத்தைப்பெற அரசாங்கம் தயாராகி வருவதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிதி அமைச்சின் தரவு அறிக்கையின்படி, 2024 மார்ச் மாத இறுதியில் இலங்கையின் மொத்த கடன் தொகை 100.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைக்காலமாக இது ஒரு ”நாட்டிற்கு நல்லசெய்தி” என்று கூறியுள்ள அரசாங்கம், மொத்த வெளிநாட்டுக் கடனில் 23.3 வீதத்தை மறுசீரமைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டுக்குக் கிடைக்கும் கடன் 

உரிய உடன்படிக்கையின் பிரகாரம் நாட்டுக்குக் கிடைக்கும் கடன் நிவாரணம் என்ன? அந்தத் தொகை எவ்வளவு? பணம் செலுத்த ஒப்புக் கொள்ளும் செயல்முறை என்ன? தற்போது செலுத்தப்படாத கடன்தொகை என்ன செய்யப்படும்? நாட்டிற்கு பெரும் சுமையாக இருக்கும் வணிகக் கடனின் நிலை என்ன? இது குறித்து இதுவரை நாடாளுமன்றத்தில் கூட எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

”இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரகசியமான ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் ஜூலை (02) அல்லது (03) வழங்கப்படவுள்ளது.

இலங்கை பெரும் ரூபா வருமானம் என்பது அமெரிக்க டொலர் வருமானம் அல்ல. சாதாரண மக்களைப் பிழிந்து பெரும் ரூபா வருமானம்.

தலைவருக்கான அங்கீகாரம்

இதற்கமைய நாட்டிலுள்ள பாரிய கடனை அடைத்து மக்களை கடன் பொறியில் இருந்து விடுவிப்பது பாரியதொரு விடயம்.

இதனை மக்களுக்கு பாதிப்பின்றி தீர்ப்பதே சரியான தலைவருக்கான அங்கீகாரம்.” என மரிக்கார் சுட்டிக்காட்டினார்.

NO COMMENTS

Exit mobile version