Home இலங்கை அரசியல் மாவீரர் நாளை முன்னிட்டு அரசாங்கத்தின் வலியுறுத்தல்

மாவீரர் நாளை முன்னிட்டு அரசாங்கத்தின் வலியுறுத்தல்

0

Courtesy: Sivaa Mayuri

வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதித்துள்ள போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான இலச்சினைகள், சீருடைகள், படங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கோரியுள்ளார்.

நாட்டின் உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அத்தகைய நினைவேந்தல் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்தின் எல்லைக்குள் நினைவேந்தல்கள்

எனவே, நினைவுகூருவதற்கான உரிமை மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் மதித்து, சட்டத்தின் எல்லைக்குள் நினைவேந்தல்களை நடத்துமாறு பொதுமக்களை அவர் கேட்டுள்ளார்.

மாவீரர் நினைவேந்தல் வாரத்தை குறிக்கும் வகையில் நவம்பர் 21ஆம் திகதி வடக்கு கிழக்கு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version