Home இலங்கை அரசியல் பிள்ளையான் கைதில் மறைந்திருக்கும் அரசின் இரகசிய திட்டம்.. சிக்கலில் தமிழர்கள்

பிள்ளையான் கைதில் மறைந்திருக்கும் அரசின் இரகசிய திட்டம்.. சிக்கலில் தமிழர்கள்

0

நாட்டின் ஆட்சியில் இருக்கும் அநுர தலைமையிலான அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை ஆட்சியைப் பொறுப்பேற்பதற்கு முன் தமிழ் மக்களுக்கு வழங்கியிருந்தது.

அந்தவகையில், கடந்த அரசாங்கங்களைப் போலவே அநுர அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில் தற்போது பின்நிற்கின்றன என்பதை அண்மைக் காலமாக இடம்பெறும் கைது நடவடிக்கைகள் நிரூபித்து நிற்கின்றன.

குறிப்பாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துறை சந்திராந்தனின் கைதும் அவரின் நெருங்கிய சகாவான இனிய பாரதி உள்ளிட்டோரின் கைது நடவடிக்கையுமாகும்.

பிள்ளையான அவரது குற்றச் செயல்களுக்காக நேரடியாகவே கைது செய்திருக்கலாம். ஆனால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தமையானது எந்தக் காலத்திலும் குறித்த சட்டமானது நீக்கப்படாது என்பதை மக்களுக்கு நிரூபிக்கவே இது இடம்பெற்றிருக்கின்றது.

இதுமாத்திரமல்ல அண்மையில் இடம்பெற்ற போராட்டங்களின் போது கூட முஸ்லீம் இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.

ஆகவே இந்த கைது விவகாரங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் தேவை இன்னும் இருக்கின்றது என்பதயே மக்களுக்கு அநுர அரசாங்கம் காட்டுகின்றது.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version