9 வருடங்கள் ஆகியும் இடமாற்றம் இன்றி துணுக்காய் வலய ஆசிரியர் ஒருவர்
கடமையாற்றி வருகின்றமை தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியையின் கணவரும் தனது இணைப்புக் காலம் நிறைவடைந்து பல
நினைவூட்டல்கள் வலயக்கல்விப் பணிப்பாளரால் அனுப்பிவைக்கப்பட்ட
நிலையிலும், 3 வருட இணைப்பு நிறைவுற்றும் மேலும் 2 வருடங்கள் கடந்த நிலையிலும்
மு/மாங்குளம் மகா வித்தியாலயத்தில் அறிக்கையிட்டு வருகின்றார்.
குறித்த ஆசிரியையின் தங்கையாரின் கணவர் துணுக்காய் வலயத்தின் நிர்வாக
உத்தியோகத்தராக கடமையாற்றி வருவதும், ஏற்கனவே தற்போதுள்ள கல்வியமைச்சின்
செயலாளருடன் உள்ளூராட்சி அதிகார சபையில் இவ் நிர்வாக உத்தியோகத்தர் ஒன்றாக
கடமையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திரு. திருமதி சமேதராக மாங்குளம் மகா வித்தியாலயத்தில் ஒரு
குடும்பம் ஆட்சி நடாத்தும் பின்னணியில் உள்ளது யார்? என் கேள்வி
எழுப்பப்படுகிறது.
