Home இலங்கை சமூகம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு – ஜனாதிபதியின் மகிழ்ச்சி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு – ஜனாதிபதியின் மகிழ்ச்சி அறிவிப்பு

0

அரச ஊழியர்களின் சம்பளத்தை 3 கட்டங்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வேலையின்மை வீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரவித்துள்ளார்.

தண்டனை வழங்க நடவடிக்கை

கடந்த வருடத்தை காட்டிலும் அரச வருமானம் 900 பில்லியன் ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரச முதலீட்டை 4 சதவீதமாக அதிகரிப்பதற்கான திட்டம் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மக்களுக்கு எதிராக எவரேனும் தவறு இழைத்திருப்பார்களாயின், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயத்தில் யாருக்கும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

https://www.youtube.com/embed/mVLYxXI_kTQhttps://www.youtube.com/embed/vw-YjMOieiQ

NO COMMENTS

Exit mobile version