Home இலங்கை அரசியல் தமிழர்களுக்கு எதிரான அறிகுறிகளை காட்டும் அரசாங்கம்: எழுந்துள்ள விமர்சனம்

தமிழர்களுக்கு எதிரான அறிகுறிகளை காட்டும் அரசாங்கம்: எழுந்துள்ள விமர்சனம்

0

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலம் என்பது வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு
எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள்
தென்பட தொடங்கியுள்ளதாக தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல்
தெரிவித்துள்ளார்.

அவரால் நேற்று (04.12.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும்,

மக்கள் விடுதலை முன்னணி செயலாளர் ரில்வின் சில்வா, அண்மைய ஊடக
பேட்டியில் மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தியும் ஒன்று என்று
கூறியதில் இருந்து மக்கள் முன்னணியில் அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது.

தமிழர்களின் அரசியல் தீர்வு

இதுவரை
காலமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாதவர்கள் தேசிய மக்கள் சக்தி என முகம்
கொண்டு வெளியில் வந்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளருடைய
கூற்றுக்கு தேசிய மக்கள் சக்தி இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை.

எனவே தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் விடுதலை முன்னணியே. எனவே தமிழர்களின்
அரசியல் தீர்வு விடயத்தில் அதன் கோரமுகம் அவ்வாறே உள்ளது என்பதிலே மாற்று
கருத்து கிடையாது.

தமிழர் தேசத்தில் அரசு படைகளை பலப்படுத்தியதும், படைத்தளங்களை
விரிவுபடுத்தியதும், அரச காணி மற்றும் பொதுமக்கள் காணிகளையும்
கையகப்படுத்தியதும், மகாவலி அதிகாரி சபையை முன்னோக்கி நகர்த்துவதும் சிங்கள
பௌத்த திணைக்களங்களை சுதந்திரமாக செயற்பட இடமளித்ததும் தெற்கின் சிங்கள பௌத்த
பேரினவாத அரசியலின் தேவை கருதியே – என்றுள்ளது

NO COMMENTS

Exit mobile version