Home இலங்கை அரசியல் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு! ஜனாதிபதியின் அறிவிப்பு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு! ஜனாதிபதியின் அறிவிப்பு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0

பொருளாதாரம் மீட்சியை அடைந்து வரும் சந்தர்ப்பத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க முடியாதென கூறிய ஜனாதிபதி, தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது வாக்குறுதிகளை மாற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வாக்குறுதி

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”அனுராதபுரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை 25,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் அது தொடர்பில் ஆராய்ந்தால், தற்போது 17,000 ரூபாவாகவுள்ள அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவே 25,000 ஆக அதிகரிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

  

பொருளாதாரம் மீட்சியை அடைந்து வரும் சந்தர்ப்பத்தில் அரச பணியாளர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க முடியாதென கூறிய ஜனாதிபதி, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவ்வாறான வாக்குறுதிகளை வழங்குகின்றார்.

ஜனாதிபதியின் கருத்துக்கள்

ஜனாதிபதி பொறுப்புடன் கூறிய கருத்துக்களை தற்போது பொறுப்பற்ற விதத்தில் கூறி வருகின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பாதுகாப்பேன் என உறுதியளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது அவற்றை மீறியுள்ளார்.

அவரின் அந்த மாற்றம், தற்போது அவருடன் இணைந்துள்ள சிலரின் அறிவுறுத்தலுக்கு அமைய மேற்கொள்ளப்படுகிறதா? என்பது தெரியவில்லை.”என கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version