Home இலங்கை அரசியல் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

0

அரச ஊழியர்கள் அரச சுற்றுநிருபம் மற்றும் நிதி அமைச்சின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய செயற்படவேண்டு்ம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன அறிவுறுத்தியுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டு, கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த முன்னாள் பிரதமரின் சிரேஷ்ட ஆலாேசகர் சரித்த ரத்வத்தேயின் வழக்கு விசாரணை முடிவடைந்த பின் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சரித்த ரத்வத்தே 1980 காலப்பகுதியில் நாட்டில் இளைஞர் சேவை மன்றத்தை ஏற்படுத்துவதற்கும், அதனை முறையாக மேற்கொள்ளவும் அதற்கு தலைமைத்துவம் வழங்கிய அரச அதிகாரியாகவே அவரை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

பாரிய சேவை

அதேபோன்று அவர் 2001 காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரதம் வீழ்ச்சியடைந்திருந்த சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சின் செயலாளாராக இருந்து பாரிய சேவையை மேற்கொண்டு பொருளாதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்த அதிகாரியாகவே நாங்கள் அறிந்திருந்திருக்கிறோம்.

அதேபோன்று 1988 காலப்பகுதியில் ஜனசவிய திட்டத்தை ஆரம்பிக்கும்போதும். அதற்காகவும் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதிக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கிய அரச அதிகாரியாகவே நாங்கள் அறிந்திருந்திருக்கிறோம்.

மேலும் நாங்கள நாட்டில் மிகவும் சிந்தனையுடனே நாட்டில் செயற்பட வேண்டி இருக்கிறது.

அரச அதிகாரிகள் எடுக்கும் தீர்மானங்களின்போது அரசாங்கத்துக்கு லாபம் ஏற்பட்டால் நாங்கள் நன்றி கூறுவதில்லை. அவ்வாறு இல்லாவிட்டால், அரசாங்கத்துக்கு நன்மை பயக்கும் சந்தர்ப்பங்களில் அதில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில்லை.

அரச ஊழியர்களுக்கான அறிவுறுத்தல்

உண்மையாக எடுக்கும் தீர்மானங்களினால் ஏற்படும் நட்டம் தொடர்பில் பொது நிர்வாக சுற்றுநிருபம் மற்றும் நிதி அமைச்சின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய அரச ஊழியர்கள் செயற்படவேண்டும் என்றே முன்னாள் பொது நிர்வாக அமைச்சர் என்றவகையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக குற்றச்செயல் சந்தர்ப்பம் தவிர வேறு சந்தர்ப்பங்களில் அரச ஊழியர்கள் மிகவும் உணர்வுமிக்க நபர்கள் என்பதால், மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதையே இந்த சந்தரப்பத்தில் நினைவுபடுத்திக் கொள்கிறேன் என எச்சரித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version